பிரியா வாரியரின் புருவ டான்ஸ் வித் ‘கேப்டன்‘.. அசத்தல் ட்ரோல் வீடியோ!

Report
36Shares

மலையாள நடிகை பிரியா வாரியரின் புருவ டான்ஸின் கேப்டன் வெர்சன் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் இடம்பெற்றுள்ள மாணிக்க மலரே என்ற பாடலில் நடிகை பிரியா வாரியார் புருவ அசைவாலேயே நடனமாடியுள்ளார்.அவரது புருவ அசைவுக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்களாகியுள்ளனர்.

தனது புருவ அசைவிலேயே காதலை வெளிப்படுத்தும் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதனை பல்வேறு தமிழ் நடிகர்களின் ரியாக்ஷனுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ட்ரோல் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தும் பிரியா வாரியரும் கண் அசைவால் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

1791 total views