ICC இடம் இந்தியாவை மாட்டிவிட்ட இலங்கை!

Report
30Shares

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெல்லி டெஸ்ட் போட்டி பலத்த சர்சைகளுடன் நிறைவுக்குவந்துள்ளது.

டெல்லியில் நிலவும் காற்றுமாசு காரணமாக இலங்கை வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபடும்போது சிரமத்தை எதிர்கொண்டதுடன் மூக்கை மறைக்கும் பாதுகாப்பு உறைகள் அணிந்து போட்டியில் விளையாடினர்.

இதுதொடர்பில் பலவிதமான சர்சையான கருத்துக்களும் வெளிவந்திருந்த நிலையில் இன்னுமொரு விடையம் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து வெளியாகியுள்ளது.

குறித்த அசௌகரிய நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ,செவ்வாய்க்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளாதாகவும் ,இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளதாகவும் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

2215 total views