ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து சிறுவன் அசத்தல்

Report
17Shares

உள்ளூர் போட்டி ஒன்றில் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி 13 வயது சிறுவன் அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் வடகிழக்கு டர்ஹாம் நகருக்கு அருகில் லாங்லே மைதானத்தில் நடைபெற்ற கழக போட்டி ஒன்றில் பிலடில்பியா கழகம் சார்பில் விளையாடிய 13 வயது சிறுவனான லுகே ரோபின்சன் 6 பந்துகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பதே சிறப்பு. இதனைவிட லுகே தந்தை ஸ்டீபன் இந்தப் போட்டியின் நடுவராக பணியாற்றியுள்ளார்.

பிலடில்பியா கிளப் போட்டி வரலாற்றில் 149 ஆண்டுகால சாதனையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1386 total views