12 அங்குலமுள்ள பெரிய கைகள் : ஒதுக்கும் கிராம மக்கள்..!

advertisement

இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தாரிக் என்ற 12 வயதுச் சிறுவனுக்கு அரிய வகை நோயினால் கைகள் 12 அங்குலம் அளவில் பெரிதாகியுள்ளதால் அவனை கிராம மக்கள் ஒதுக்கும் அவலம் நிகழ்ந்து வருகின்றது.

சாதாரண மனிதர்கள் போன்று அல்லாமல் மிகப் பெரிய அளவில் கைகள் இருப்பதால் அவதிப்படும் இச் சிறுவன் போதிய பணவசதி இன்மையால் மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றான்.

அவனது தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்கு தன்னால் முடிந்த அளவில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். எனினும் அவரது மறைவிற்குப் பின் அது முடியாமல் போயுள்ளது.

இவனது கைகளைப் பார்த்து கிராம மக்கள் இவனுடன் பேசுவதற்கு பயப்படுவதுடன் ஒதுக்கியும் வைத்துள்ளனர். இதனால் இவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

போதிய பணவசதி இருப்பின் இச் சிறுவன் நோயை குணப்படுத்த முடியும் என உறவினர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

advertisement