பொக்ரானில் நடந்த சோதனையின்போது புதிதாக வாங்கிய பீரங்கி சேதம் விசாரணைக்கு உத்தரவு

advertisement

அமெரிக்காவை சேர்ந்த பி.ஏ.இ.சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு 145 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், முதல்கட்டமாக 2 பீரங்கிகள் கடந்த மே மாதம் வந்து சேர்ந்தன.

இந்நிலையில், அந்த பீரங்கிகள், கள பரிசோதனைக்காக, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, இந்திய வெடிபொருட்களை பொருத்தி சுட்டபோது, ஒரு பீரங்கியின் குழல் வெடித்து சேதம் அடைந்தது. நல்லவேளையாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

advertisement