குழந்தையிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டைப் பறித்ததற்காக கொலை!!

advertisement

குழந்தையிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பறித்ததால் கோபம் அடைந்த குழந்தையின் தந்தை, பிஸ்கட் பாக்கெட் பறித்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே புதுப்பட்டியில் கூலி வேலை பார்த்து வந்தவர் மாரிச்சாமி. இவர் விளையாட்டாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சரவணன் என்பவரின் குழந்தையின் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பறித்துள்ளார். அதைப் பார்த்து ஆத்திரமடைந்த சரவணன், அரிவாளால் மாரிச்சாமியை வெட்டியுள்ளார்.

அதனையடுத்து, மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து, அங்கு வந்த போலீசார் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

advertisement