ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீடீர் திருப்பம்!

Report
214Shares

பேரறிவாளனின் தண்டனைக் குறைப்பு குறித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்கிறதா என்பதை அறிவிக்க டில்லி உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போதே டில்லி உயர்நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேரறிவாளன் முன்னர் அளித்த வாக்குமூலத்தில் சில பகுதிகளை மத்திய புலனாய்வு பணியகம் நீக்கியதாக பேரறிவாளனை விசாரணை செய்த மத்திய புலனாய்வு பணியக அதிகாரி தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த நீக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு 9 வோல்ட் மின்கலங்கள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியிடப்பட்ட அந்த வாக்குமூலத்தில் வி.தியாகராஜன் என்ற அந்த முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

'2 மின்கலங்கள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து தமக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தாம் பதிவு செய்யவில்லை அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த வாக்குமூலம் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கக் கூடும் என்பதாலும், வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கத்தையே இழந்து விடும் என்பதாலும் இது பதிவு செய்யத் தகுதி பெறாதது என்று முடிவெடுத்து தாம் அதனைப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், அந்த சந்தர்ப்பத்தில், வெடிகுண்டு பற்றிய விசாரணையும் நிலுவையில் இருந்தது என்றும் அவர்கூறியுள்ளார்.

2 மின்கலங்களை வாங்கிக் கொடுத்ததன் செயலே கொலை சதியில் ஈடுபாடு கொண்டதாக ஆகாது.

கம்பி இணைப்பற்ற தொலைபேசித் தகவல் இதனை உறுதி செய்கிறது என்று தியாகராஜன் உச்ச நீதிமன்ற வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே மரண தண்டனையிலிருந்து பேரறிவாளனுக்கு கருணை காட்டிய உயர் நீதிமன்றம் நீண்டகாலமாக நிலுவயில் உள்ள அவரது விடுவிப்பையும் கருணையுடன் அணுக வேண்டும் என்று தியாகராஜன் கோரியுள்ளார்

நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று தானாகவே முன்வந்து தன்னால் நீக்கப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, பேரறிவாளன் தண்டனைக் குறைப்பு குறித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்கிறதா என்பதை இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

8098 total views