சவுதியில் அமலாகும் வரிவிதிப்பு – அதிருப்தியில் புலம்பெயர்ந்தவர்கள்

Report
6Shares

சவுதி அரேபியாவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டவர்களின் குடும்பம் வரி கட்ட வேண்டும் என அதிகாரபூர்வமாக இன்னும் சொல்லவில்லை என கூறப்படும் நிலையில், இது குறித்து வெளிநாட்டினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் பல்வேறு நாடுகளை சேந்த மக்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பரில் சவுதி அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் அங்கு குடியேறுபவர்கள் மீது குடும்ப வரி விதிக்கும் முன்மொழிவும் இடம்பெற்றிருந்தது.

அதன்படி புலம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் நூறு ரியால்கள் (1720 ரூபாய்) வரி விதிக்கப்படலாம்.

இது 2018 ஜூலை முதல் மாதத்துக்கு 200 ரியால்கள், அதற்கு அடுத்த ஆண்டு 300 ரியால்கள், 2020 ஜூலை முதல் மாதந்தோறும் 400 ரியால்களும் வரியாக செலுத்த வேண்டியிருக்கலாம்.

இது குறித்து சவுதியில் புலம்பெயர்ந்துள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சவுதிக்கு சென்ற அலி இமான் சித்திகி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அங்கு வசிக்கிறார்.

அலி இமான் கூறுகையில், இந்த புதிய வரியால் நாங்கள் அனைவருமே பாதிக்கப்படுவோம். இதுவரை நாங்கள் சிறிதளவு சேமித்து வந்தோம்,

இனிமேல் சேமிப்பிற்கு பதிலாக அரசுக்கு கப்பம் கட்டவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இதுவரை கிடைத்த தகவல்களின்படி, நாங்களே வரி கட்டவேண்டும் எனவும் நிறுவனங்கள் எங்களுக்காக வரி கட்ட மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்கு வேலையும் நிலையாக இல்லாத நிலையில், புதிய வரி நிலைமை என்பது இன்னும் மோசமாகிவிடும் எனவும் இமான் கூறியுள்ளார்.

அலகாபாத்தில் இருந்து சவுதிக்கு வந்திருக்கும் அப்துரப் அன்சாரி கூறுகையில், அரசின் எண்ணம் வெளிப்படையானது, அதிக வெளிநாட்டினரை நாட்டில் வைத்துக் கொள்ள அரசு விரும்பவில்லை.

சவுதியிலிருந்து, வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக தனக்கு தோன்றுகிறது என கூறியுள்ளார்.

இப்படி பல வெளிநாட்டினரும், வரி விதிப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வெளிநாட்டினர் மீது அந்நாட்டு அரசு வரி விதிக்கும் புது வழியை கண்டறிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் குறிப்பிட்ட பிறகு, இந்த வரியைப் பற்றி சவுதி அரசு வேறு எந்த அறிவிக்கையும் வெளியிடவில்லை என தெரிகிறது.

எனவே, இந்த வரிவிதிப்பிற்கான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம் அல்லது சில துறைகளுக்காவது விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பலர் நம்புகிறார்கள்.

967 total views