வலுக்கும் போராட்டம்: பிரேசில் ஜனாதிபதி மாளிகை நுழைவாயில் மீது தாக்குதல்

advertisement

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில் மீது காரொன்றை மோதச்செய்து ஜனாதிபதி மைக்கல் டெமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ள பிரேசில் ஜனாதிபதி மைக்கல் டேமரை பதவி விலக வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தாக்குதலையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட காரின் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி, காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

எனினும், மேற்படி சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தனது வாசஸ்தலத்தில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமொன்றிடமிருந்து இலட்சக்கணக்கான டொலர்களை இலஞ்சமாக பெற ஏற்பாடு செய்ததாக ஜனாதிபதி மைக்கல் டெமர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும், மேற்படி குற்றச்சாட்டை அவர் முற்றாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement