வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஐ.எஸ்

Report
9Shares

மத்திய கிழக்கு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டு வன்முறையில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அடாவடித்தனம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபலோன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக்கில் கடினமான தருணத்தை எதிர்நோக்கிவரும் அதேவேளை, சிரியாவில் ஐ.எஸ். இன் கோட்டையாக திகழும் ரக்கா நகரின் பெரும்பாலான பகுதிகளையும் இழந்து வருகிறது.

அந்தவகையில், ஐ.எஸ். வீழ்ச்சியின் திசையை நோக்கி வேகமாக நகர்ந்துக் கொண்டிருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் மேலதிக துருப்புக்களை அனுப்பி பயிற்சிகளை முன்னெடுக்கவும் பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையானது உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் பணியில் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

1136 total views