வேண்டுமென்றே மூழ்கிய நிலையில் 55 குடியேறிகள் உயிரிழப்பு

Report
36Shares

வேண்டுமென்றே மூழ்கிய நிலையில் 55 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக, ஐ.நா.வின் குடிவரவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

யேமனின் கடற்கரையிலில், ஒரு படகில் இருந்து 180 குடியேறிகள் வரை கட்டாயமாக படகுகளை விட்டு கடலுக்குள் இறங்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

தாம் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் ஆட் கடத்தல்காரர்களால் படகொன்றிலிருந்து கடலுக்குள் தள்ளப்பட்டதில் கடந்த புதன்கிழமை சுமார் 50 பேர் இறந்து, சில நாட்களில் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த நடவடிக்கை குறித்து, இது ஒரு புதிய போக்கின் தொடக்கமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குடியேறிகளை படகுப் பயணங்கள் மூலம் நாடுகளுக்குக் கொண்டு செல்வதால் அவர்கள் கொல்லப்படலாம் என்ற ஆபத்து காரணமாக கடற்கரைக்கண்மையில் படகோட்டிகளால்இவ்வாறு குடியேறிகளை இறக்கி விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த புதனன்று, கடற்கரையோரத்தில் புதையுண்டிருந்த 29சடலங்களை இந்த அமைப்பு மீட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2125 total views