சொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை!

advertisement

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், 'பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை' என்று, மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள தெரிவித்துள்ளன.

அத்துடன், இப்படிப்பட்ட நபருக்கு 12000 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை விதிக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த விவாகரத்து ஆன ஒருவர் 15 வயதே ஆன தனது சொந்த மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து தெரியவந்தவுடன் அவருடைய முன்னாள் மனைவி நீதிமன்றத்தை அணுகி தனது மகளை மீட்டுத்தருமாறு வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்த விசாரணை நடந்தபோது அவர் மீது 626 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12000 ஆண்டுகளுக்கும் அதிகமாக வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

advertisement