பலி கொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டுபிடிப்பு

Report
268Shares

பெருவில் திருஜிலோ என்ற நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலிகொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளனர்.

பெருவின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 5-14 வயதுக்குட்பட்ட 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்திருந்தனர்.

இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால சிமு பேரரசு காலத்தில நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், அந்த இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மேலும் 56 குழந்தைகள் மற்றும் 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஊரே அழியும் வகையில் அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் இந்த வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர் எனவும் கருதப்படுகின்றது.

8466 total views