தீவக பகுதியில் அதிபர்கள் இன்றி பல பாடசாலைகள்.

Report
12Shares

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக தீவக வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிபர் இல்லாத பாடசாலைகளில் அதிபர்களின் கடமையை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு, மிகைநிரப்பு அதிபர்கள் என பெயரிட்டு அவர்களுக்கு எவ்வித சம்பள உயர்வோ பதவி உயர்வோ வழங்கப்படாமையானது, அவர்களை உள ரீதியாக பாதிப்படைய வைத்துள்ளதோடு, அவ்வாறே ஓய்வுபெறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என சிறிதரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வடக்கில் மாத்திரம் 164 பேர் இவ்வாறு மிகைநிரப்பு ஊழியர்களாக கடமையாற்றுவதாக தெரிவித்த சிறிதரன், இந்த சொல்லை மாற்றி, இவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

யுத்த காலத்தில் மின்சாரம் இன்றி, தீவக வலயத்தில் குறிப்பாக துணுக்காய், மடு, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இந்த ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள் என சுட்டிக்காட்டிய சிறிதரன், பரீட்சை என்ற சொல்லுக்கு அப்பால், சேவைக் காலம் மற்றும் தேவைகளைக் கருத்திற்கொண்டு இவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

1173 total views