பலாலி விமான நிலையத்தில் முதன் முறையாக கால்பதிக்கும் சிறார்கள்

advertisement

யாழ். காங்கேசன்துறையில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தை பார்வையிட கரவெட்டி குழந்தை யேசு பாலர் பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர்.

கல்விச் சுற்றுலாவை மேற்கொண்ட குறித்த பாடசாலை மாணவர்கள் முதல் தடவையாக பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டுள்ளனர்.

கரவெட்டி குழந்தை யேசு பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியரான அருட் சகோதரி எம்.புஷ்பமாலாவின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதற்கு தமது ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார்.

இந்த பாடசாலையைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள், 48 பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் என 48க்கும் அதிகமானோர் இந்த விமான நிலையத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டதோடு, முப்படையினரும் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement