சொந்த மண்ணில் நான்கு தங்கம் வென்ற முல்லை வித்தியானந்தாக் கல்லூரி!

advertisement

தேசியரீதியிலான அனைத்து பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி வடமாகாணத்தில் முதல் முதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 8ஆம் திகதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றுள்ளது.

இதன்படி இந்தக் குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

எம்.ஏ.எஸ் நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் நாட்டில் உள்ள 48 பாடசாலைகளை சேர்ந்த 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

16 பிரிவுகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதி போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் வித்தியானந்தா கல்லூரி 4 தங்க பதக்கங்கள் பெற்று முதல் இடத்தினைபெற்றுள்ளது.

advertisement