காதல் ஜோடிகள் செய்து கொண்ட விசித்திர திருமணம்

advertisement

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் எளிமையாக 11 ரூபாய் மாத்திரம் செலவழித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பெரும் ஆச்சியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜாஹித் அலியும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபிஸதா பேரேஸ்டாவுமே இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள்.

குறைந்த செலவில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்!

விமான நிலையத்தில் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.

காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், நபிஸா இது குறித்து பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தியரை தனது பெற்றோர் மருமகனாக ஏற்றுக் கொள்வார்களாக என கவலையடைந்திருந்த நிலையில், அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குறித்த திருமணம் மிக எளிமையாக 11ரூபாய் செலவில் நடைபெற்றிருந்தது.

குறைந்த செலவில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்!

குறித்த 11 ரூபாவானது திருமணத்திற்கு தலைமை தாங்கிய மதகுருவிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் குறித்து ஜாஹித் அலியின் தந்தை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு என் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான காதல் போன்று வலுப்பெறும் என நம்புவதாக கூறியுள்ளார்.

advertisement