காஜல் அகர்வாலாக மாறிய குடும்பப் பெண்; திடீர் அதிசயத்தால் கணவன் பேரதிர்ச்சி!

Report
156Shares

ஓமலூர் அருகே தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட குடும்ப அட்டை ஒன்றில் குடும்ப தலைவி ஒருவரின் புகைப்படத்திற்கு

பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடப்பட்டுள்ளது.

காஜல் அகர்வாலாக மாறிய குடும்பப் பெண்; திடீர் அதிசயத்தால் கணவன் பேரதிர்ச்சி!

ஸ்மார்டாக யோசிக்கிறோம் என்று கூறி குடும்ப அட்டைக்குப் பதிலாக தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல குழப்பங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரோஜா ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஒரு வழியாக பல நாள் காத்திருப்பிற்குப்பின் குடும்ப அட்டை வந்தது. அப்போது தான் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதில் தனது மனைவி சரோஜா புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு வேறு புகைப்படம் மாறி விட்டது. புது அட்டை வரும் வரையில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி இருகின்றனர். இதனால் மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

5702 total views