இலங்கை மது வாங்க விற்க பெண்களுக்கு இருந்த தடை நீக்கம்

Report
19Shares

இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதற்கு இருந்த தடை 38 வருடத்திற்கு பின் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கைடில் 1979ஆம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டுவந்தது. அப்போது பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை நிதியமைச்சகம் பெண்கள் மதுபானம் வாங்க, விற்க அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் ஆண் மற்றும் பெண் சமத்துவத்தினை மீண்டும் நிலை நிறுத்தவும், சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவது என அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த தடை அமலில் இருக்கும்போது பல தொழில் நிறுவனங்கள் பெண்கள் மதுபானம் பரிமாறுதல் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

1025 total views