கனடிய உணவு பதப்படுத்தும் ஆலை பாரிய தீயினால் அழிக்கப்பட்டுள்ளது?

Report
317Shares

பேர்லிங்ரன், ஒன்ராறியோ- பேர்லிங்ரனில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் ஆலை ஒன்று பாரிய தீக்குள்ளாகியுள்ளது. குறைந்தது இறைச்சி பதப்படுத்தும் இந்த ஆலையின் அரைவாசி பாகம் தீயினால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின் எலிசபெத் வே மற்றும் அப்பிள்பை லைனிற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த ஆலையில் புதன்கிழமை மாலை 4-மணியளவில் தீப்பிடித்துள்ளது.

பாரிய தீயுடன் சம்பவ இடத்தில் 40தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10-டிரக்குகள் போராடியதாக கூறப்படுகின்றது.

எவரும் காயமடையவில்லை. விபத்திற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.

11549 total views