பிரித்தானிய நகரங்களில் நவீன அடிமைகள் -மனிதக்கடத்தல் அதிர்ச்சித் தகவல்

Report
469Shares
advertisement

பிரித்தானியாவின் பெரிய நகரங்களில் நவீன அடிமைத்துவம் மற்றும் மனிதக்கடத்தல் நிலவரங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருப்பதாக பிரித்தானிய தேசிய குற்றத்தடுப்பு முகமை அமைப்பு எச்சரித்துள்ளது.

இவ்வாறான சட்டவிரோத நகர்வுகளால் சுமார் பத்தாயிரம் முதல் பதின்மூவாயிரம் மக்களே பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆரம்பதில் நினைத்தாலும் தற்போது அதனைவிட ஆயிரக்கணக்கில் பாதிக்கபட்ட மக்கள் இருப்பதாகவும் மேற்படி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்தவிடயத்தில் இதுவரை பகிரங்கமான சம்பங்கள் சொற்பமே எனவும் வெளியில் வராத பல விடயங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நியூகாசல் பகுதியில் சிறுமிகள் உட்பட பலவீனமான பெண்களை போதையூட்டி அவர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு வலையமைப்பு அகப்பட்டதும் அதில் பங்கெடுத்த பதினெட்டுப்பேர் குற்றவாளிகளாக முடிவுசெய்யப்பட்ட நிலையில் இந்த தரவுகள் வெளிப்பட்டுள்ளன.

17011 total views
advertisement