பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு புதிய விசா கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை

Report
3Shares

அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட ஆறு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கும், அனைத்து அகதிகளுக்கும் புதிய விசா கட்டுப்பாடுகளை வெள்ளை மாளிகை விதித்துள்ளது.

மேற்படி விசா விண்ணப்பதாரிகள், அமெரிக்காவில் நெருங்கிய உறவினர்களை அல்லது வணிக பிணைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாட்டினால் ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் மக்களே பாதிக்கப்படவுள்ளனர்.

ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் வர முடியாதவாறு ஜனாதிபதி ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவை, பகுதியளவில் நடைமுறைப்படுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதியளித்தது.

குறித்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தே தற்போது இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

863 total views