அமெரிக்காவில் அதிகமானவர்களுக்கு பப்பாளி பழத்தினால், சால்மோனெல்லா பக்றீரியாத் தொற்று

advertisement

அமெரிக்காவில் 100 க்கும் அதிகமானவர்களுக்கு பப்பாளி பழத்தினால், கொடிய சால்மோனெல்லா பக்றீரியாவினால் உணவு நஞ்சாதல் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் மாநிலத்தில் 16 மாநிலங்களில் இந்தத்தொற்று ஏற்பட்டுள்ளதோடு இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 35 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரடோல் வகைப்பப்பாளிப் பழங்களில் இந்த பக்றீரியாக்கள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) கூறியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள Campeche என்ற பண்ணை ஒன்றிலேயே சல்மானேல்லாத்தொற்று ஆரம்பித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் கரீபினா, காவி மற்றும் வலேரி போன்ற விற்பனைப் பெயர்களின் கீழ் இந்த பண்ணையிலிருந்து வரும் பப்பாளிப் பழங்கள் விற்பனையாகின்றன.

இவற்றைத் திரும்பப் பெறுவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், மெக்ஸிக்கோவில் இருந்து வரும் மராடோல் வகைப் பப்பாளிகளை உடனேயே எறிந்து விடவேண்டும் என்று பொதுமக்களுக்கும், உணவகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

advertisement