வடகொரியா சிந்தித்து செயல்படுவது நல்லது - ட்ரம்ப் எச்சரிக்கை

advertisement

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை எதற்கும் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட குவாம் தீவு மீது வடகொரியா ஏவுகணை சோதணை நடத்தும் என அறிவித்திருந்ததை தொடர்ந்து ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் நான்கினை குவாம் தீவின் அருகில் வீசப்போவதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்திருந்தது.

வடகொரியாவின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா எதனை செய்வதென்றாலும் நன்றாக சிந்தித்து செயற்படுமாறு ரொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

advertisement