இருண்ட படுக்கையறையில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்; பேராபத்து நிச்சயம்!

advertisement

நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், கண்டிப்பாக ஆரோக்கியமாக வாழலாம்.

இரவில் தூங்குவதற்கு முன்னர் எந்நேரமும் கைபேசியைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

கண்கள் உள்ளே புதையக்கூடிய சாத்தியக்கூறுகள் இதனால் அதிகம் உண்டு என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதன் விளைவு என்னவெனில் சில ஆண்டுகளில் ஏமக்குறைவு நோயாளிகளின் கண்களைப் போல காட்சியளிக்கத்தொடங்கிவிடும்.

மேலும் இரவில் காதலி அல்லது காதலுடன் நீண்ட நேரம் கைபேசியில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரையில் தான் அதிகமான நுண் கிருமிகள் காணப்படுகின்றன. அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும்.

இவை மட்டுமன்றி தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளையும் இந்த தவறான செய்கை கொண்டுவருகிறது. எனவே இரவில் தூங்குவதற்கு முன்னர் எதுவித சிந்தனைகள் செயல்களுமின்றி அமைதியாக உறக்கத்தைத் தழுவவேண்டும். அதுதான் நமது வாழ்வைப் பொலிவாக்கும்!

advertisement