நடுவானில் பரபரப்பு!! பறந்த விமானத்தில் திடீரென மயங்கி வீழ்ந்த பயணிகள்!! நடந்தது என்ன?

Report
1047Shares

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது குளிர்சாதன வசதிகள் செயல்படாததால், விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்ற சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தினைச் சேர்ந்த விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள குளிர்சாதன வசதிகள் திடீர் என செயல்படாமால் நின்று விட்டது.

இதன் காரணமாக அங்கு திடீரென்று வெப்ப நிலை அதிகரித்தமையால் பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது.

இதன்போது சில வயதானவர்கள் மயங்கிச் சரிந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.பயணிகளில் சிலர் கூறும் பொழுது விமானம் புறப்படும் முன்னரே, ஏறியவுடனே குளிர்சாதன வசதிகள் சரியாக செயல்படாததினைக் கண்டு புகார் கூறியதாகவும், விமானம் புறப்படும் முன்னரே அது சரி செய்யப்படும் என்று கூறியவர்கள் கடைசி வரை சரி செய்யவே இல்ல என்றும் தெரிவித்தனர்.

பின்னர் கடும் சிரமங்களுக்குப் பிறகு மூன்று மணி நேரம் தாமதமாக அந்த விமானம் தரையிறங்கியது.ஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த பயணிகளைக் கொண்டிருந்த விமானத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதேவேளை குறித்த விமானத்தில் அதிகளவிலான பெண்கள் மற்றும் குழந்தைகளும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

31793 total views