பாப்பரசர் பிரான்சிஸ் காயமடைந்தார்

Report
31Shares

கொலம்பிய சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்த போது நிலைதடுமாறிய பாப்பரசர் பிரான்சிஸ், குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதியால் காயமடைந்தார்.

பாப்பரசர் பிரான்சிஸ், தென்னமரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேண்கொண்டிருந்தார். தனது பயணத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் அங்குள்ள கார்ட்டஜினா நகரில் மக்களைச் சந்தித்தார்.

திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு சென்றார். திடீரென நிலைதடுமாறிய அவர், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதினார்.

இதில் அவரது கன்னத்திலும், புருவத்திலும் லேசான காயம் ஏற்பட்டு குருதி சொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அந்த காயத்துடனே மக்களை சந்தித்து ஆசி வழங்கினார்.

1425 total views