வட கொரியா மீது பொருளாதார தடைக்கு ஐ.நா., ஒப்புதல்

Report
16Shares

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான தீர்மானத்திற்கு ஐ.நா., ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான தீர்மானம் ஐ.நா.,வில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யா, சீனாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன்படி, வருடந்தோறும், வடகொரியா, 2 மில்லியன் பாரல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு தடை, ஜவுளி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அந்நாட்டு கப்பல்கள் சோதனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், புதிய ஆபத்து வளர்ச்சி பெறுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். வட கொரியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை தடுக்க அமெரிக்கா தனியாகவே நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

984 total views