இர்மா சூறாவளிக்கு ஜார்ஜியாவில் 3 பேர் பலி

Report
12Shares

இர்மா சூறாவளி பாதித்த ஜார்ஜியா மாகாணத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

மணிக்கு 210 கிலோமீட்டருக்கு வீசிய இர்மா சூறாவளி திங்கட்கிழமை மதியம் புளோரிடாவை கடந்தது. ஜார்ஜியாவை நோக்கி பயணப்பட்டு அங்கும் ஏராளமான சேதங்களை இர்மா ஏற்படுத்தியது.

இர்மா சூறாவளி பாதிப்பின் காரணமாக ஜார்ஜியா மாகாணம் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டாவில் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று வீசியதில் மரங்கள் விழுந்ததில் ஜார்ஜியாவில் 3 பேரும், தென் கரோலினாவில் ஒருவரும் பலியாகியுள்ளனர். இர்மா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் கனமழை பெய்து வருகிறது. மாகாணத்தின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் ஜார்ஜியாவின் கடற்கரை ஓரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இர்மா சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை நோக்கி சென்றுள்ளது. இதனால் அங்கும் கனமழை பெய்து வருகிறது. இர்மா சூறாவளி அலபாமா மாகாணத்தை தொடர்ந்து மிசிசிப்பி, டென்னிசி ஆகிய பகுதிகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

893 total views