ரோஹிஞ்சா போராளிகளுக்கு உதவுவது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களா?

Report
34Shares

மியான்மரில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசம் தப்பிச்சென்றதற்கு, மியான்மர் ராணுவம் மற்றும் அர்சா எனும் ரோஹிஞ்சா தீவிரவாதிகள் இடையிலான மோதலே காரணம்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மரின் ரகைன் மாநிலத்தில் காவல் நிலையங்கள் மீது அரக்கன் ரோஹிஞ்சா ராணுவத்திற்கு எதிராக போரிடும் அர்சா எனப்படும் அரக்கன் ரோஹிஞ்சா மீட்புப்படை (அர்சா) பற்றிய பிபிசி மானிடரிங் பிரிவின் செய்தி தொகுப்பு.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் உதவி?

பாகிஸ்தானின் தீவிரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பா, அர்சா எனப்படும் ரோஹிஞ்சா போராளிகளுக்கு பயிற்சி அளித்தாக கூறும் இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை, மியான்மர் செய்தியாளர்களால் நடத்தப்படும் தி மிசிமா ஊடக குழு அடிக்கடி மேற்கோள்காட்டுகிறது.

பாகிஸ்தானின் தாலிபன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் நெருக்கமாக இருக்கும் மியான்மரின் மற்றோரு தீவிரவாதக் குழுவான ஹுஜி-ஆ குழுவின் தலைவரால், அடா உல்லாஹா என்பவர் அர்சா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் எனவும் மிசிமா ஊடக குழு கூறியிருந்தது.

செப்டம்பர் 1-ம் தேதி, சவுத் சீனா மார்னிங் போஸ்டில் கட்டுரை ஒன்றினை எழுதிய மிசிமா ஊடக குழுவின் ஆசிரியர் ஷுபிர், வங்கதேசத்தின் ஜமாதுல் முஜாஹிதீன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இந்தியன் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுடன் அர்சாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது இந்தியாவையும், வங்கதேசத்தையும் கவலையடைய வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

2171 total views