அமெரிக்காவிற்கு பாரிய வலிகள் நிச்சயம் - வடகொரியா மிரட்டல்

Report
146Shares

அமெரிக்கா இனிவரும் காலங்களில் பாரிய வலிகளை தாங்க வேண்டியிருக்ககுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா மீது ஐ.நா விதித்துள்ள புதிய தடைகளையடுத்தே குறித்த எச்சரிக்கையை வடகொரியா விடுத்துள்ளது.

ஐ.நா மற்றும் சர்வதேசங்களின் எச்சரிக்கை மற்றும் தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுவாயுத பரிசோதனைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி ஹைட்ரஜன் அணுவாயுதத்தை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்திருந்தது.

குறித்த சோதனையின் விளைவாக, அந்நாட்டில் இரண்டு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன், ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன.

வடகொரியாவின் குறித்த பரிசோதனையையடுத்து, ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் தமது எதிர்ப்புக்ளை வெளியிட்டிருந்தன.

ஐ.நாவின் பாதுகாப்பு பேரவையில் குறித்த பரிசோதனைக்கு எதிராக புதிய தடைகளை விதித்திருந்தன.

அத்துடன், அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐ.நாவுக்கான வட கொரிய தூதுவர், வட கொரியாவுடன் போர் புரிவதை விரும்புகிறதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அத்துடன், வடகொரியாவின் மீதான ஐ.நாவின் புதிய தடைகளை முற்றிலும் புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த தடை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப். குறித்த தடைகள் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு போதுமானதல்ல என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6860 total views