நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முடுக்கி விட வடகொரியா சபதம் செய்துள்ளது.

advertisement

வடகொரியா 6–வது முறையாக கடந்த 3–ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம், எதிர்ப்பின்றி நிறைவேறியது. இதனால் வடகொரியாவின் ஜவுளி ஏற்றுமதி பாதித்துள்ளது. அந்த நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய பொருளாதார தடைகள் காரணமாக வடகொரியாவுக்கு ரூ.7,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தீய பொருளாதார தடைகளுக்கு மத்தியில், நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முடுக்கி விட வடகொரியா சபதம் செய்துள்ளது.

இதுபற்றி வடகொரிய வெளியுறவுத்துறை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘‘அமெரிக்காவின் முயற்சியால் மேலும் ஒரு சட்டவிரோத, தீய பொருளாதார தடை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், இருப்பு உரிமையை நிலைநாட்டவும் தனது வலுவை வடகொரியா இரட்டிப்பாக்கும்.’’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் பாதை முற்றிலும் சரியே என்று நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

advertisement