உலகெங்கும் முடங்கிப்போனது முகநூல்; என்னதான் நடந்தது?

Report
199Shares
advertisement

உலக சமூக வலைத்தள ஜாம்பவானான முகநூல் மற்றும் Instagram ஆகியன இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அனைத்திலும் செயலிழந்துபோயுள்ளன.

முக நூலின் முக்கியமான சில செயற்பாடுகள் அனைத்தும் செயலிழந்துபோனதால் மக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக உலகெங்குமிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

முக நூல் பாவனையாளர்கள் தாம் முக நூலில் படங்களையும் பதிவுகளையும் முற்படுத்துவதில் மிகப்பெரிய சிரமத்தினை எதிர் நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரச்சனையானது அமெரிக்க ஐரோப்பிய நேரங்களின்படி இன்றைய தினம் இந்த மதியம் சுமார் 4 மணி நேரத்தில் (இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் இராப்பொழுது) தொடங்கியது என கூறப்பட்டுள்ளது.

முகநூலின் திடீர் செயலிழப்பானது எதிர்பார்ப்பிற்கு மாறானதாகும். முன்னறிவித்தலின்றி முகநூல் முடங்குவதில்லை. இதேவேளை முக நூலின் உரிமைத் தளமான Instagram-உம் சம நேரத்தில் செயலிழந்துள்ளது.

இதேவேளை, பேஸ்புக் பங்குகளுக்கான தனது முன்னறிவிப்பு 190 டொலரிலிருந்து இருந்து 235 ஆக உயர்ந்துள்ளது, நேற்றைய தினம் நெருக்கமாக இருந்து தற்பொழுது 37 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆல்பாபெட் பங்குகள் 25 சதவிகிதத்தினை மேலதிகமாக முக நூலுக்கு திரட்டிக்கொடுத்துள்ளன. மேலும் பேஸ்புக் பங்குகள் ஒரே நேரத்தில் 49 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. என்றும் தகவல் கிடைத்துள்ளன.

கீழேயுள்ள இந்த வரைபடத்தில் ஃபேஸ்புக் செயலிழப்பு மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை நீங்கள் காணலாம்.

7222 total views
advertisement