முதல் பெண்மணி அந்தஸ்து கேட்டு போர்க்கொடி தூக்கிய :டிரம்ப் முதல் மனைவி

Report
74Shares
advertisement

அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குதான் என அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் மனைவி போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு முதல் பெண்மணி என்ற அந்தஸ்து கிடைக்கும். தற்போது டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக உள்ளார்.

அவருக்கு 3 மனைவிகள். அதில், ஒருவரை விவாகரத்து செய்து விட்டார். அவர் தற்போது மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வாழ்ந்து வருகிறார்.

மெலானியாவுக்கு தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு டிரம்பின் முதல் மனைவி இவானா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவானா அளித்த போட்டியில் கூறியதாவது:- நான் என் முன்னாள் கணவர் டிரம்புடன் 2 வாரங்களுக்கு ஒருமுறை பேசுவேன்.

வெள்ளை மாளிகையின் நேரடி டெலிபோன் நம்பர் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த நம்பரில் நான் டிரம்புடன் டெலிபோனில் பேச மாட்டேன். ஏனெனில் அங்கு மெலானியா இருக்கிறார்.

அவர் மீது எனக்கு பொறாமை எதுவும் கிடையாது என்றார்.

3196 total views
advertisement