ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்தார்

Report
8Shares

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

902 total views