Snapchat இனால் பாதிக்கப்பட்டுப் பரிதாப நிலையில் பதின்ம வயதுப் பெண்கள்!!

Report
20Shares

Snapchat இல் போட்ட படங்களால், 50 இற்கும் மேற்ப்பட்ட பதின்மவயதுப் பெண்கள், பெரும் பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மிகவும் பிரத்தியேகமன நெருக்கமான படங்கள், மேலும் சில பெண்களின் ஆடைகள்ற படங்கள் என்பன, அவர்களிற்குத் தெரியாமலே ஸ்நப்சட்டில் எடுக்கப்பட்டுப் பகிரப்பட்டுள்ளன.

இதனை வெளியிட்வர்கள், அந்ததந்த ஆடைகளற்ற, அரைகுறை ஆடைகளையுடைய பெண்களின் பெயர்களையும், தொடர்பிலக்கங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பெண்களை அவமதிக்கும்படி இந்தத் தகவல்களில் குறிப்படப்பட்டுள்ளன.

இதில் ஸ்ரார்ஸ் பேர்க்கில் மட்டும் 50 பதின்ம வயதுப் பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் லிசேக்களும் பெரும் சிக்கலிற்கு உள்ளாகி உள்ளன.

இதளைத் தொடர்ந்து ஸரார்ஸ்பேர்க் நகரிலுள்ள 6 லிசேக்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இதனை வெளியிட்டவர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களிலும், ஸ்நப்சட் போன்ற தகவற்பரிமாற்றங்களிலும், பதின்ம வயதுப் பெண்கள், தங்கள் ஆடையற்ற, அல்லது அரைகுறையான ஆடைகளுடன் படங்களை வெளியிடுவது நாளை எவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்தக் காட்டு!

1089 total views