20 ஆண்டுகளுக்குப் பின் குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்!

Report
67Shares

பிறந்த குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் 20 ஆண்டுகளுக்குப் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு 20 ஆண்டுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

52 வயது குளோரியா வில்லியம்ஸ் (Gloria Williams) சென்ற ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

1998-இல் ஜாக்சன்வில் மருத்துவமனை ஒன்றிலிலிருந்து கடத்திய குழந்தையைத் தனது சொந்தப் பிள்ளையாக வளர்த்திருக்கிறார் வில்லியம்ஸ்.

காணாமல் போன, தவறாகப் பயன்படுத்தப்பட்ட சிறாருக்கான தேசிய நிலையத்தின் (National Center for Missing and Exploited Children) உதவியோடு, காவல்துறையினர் கடத்தப்பட்ட கமியா மோப்லியை (Kamiyah Mobley) கண்டுபிடித்துள்ளனர்.

மோப்லியின் மரபணு அவளது சொந்தப் பெற்றோரின் மரபணுவுடன் பொருந்தியுள்ளது.

வில்லியம்ஸ் தாதியாக வேடம் பூண்டு, பிறந்து சில மணி நேரமே ஆன மோப்லியை அதன் தாயாரின் அறையிலிருந்து கடத்தியிருக்கிறார்.

அதன்பின் குழந்தையின் பெயரை, அலெக்ஸிஸ் மனிகோ (Alexis Manigo) என்று மாற்றியிருக்கிறார்.

18 ஆண்டுகள் கழித்து, மோப்லி தென் கரலைனாவில் சீரான நிலையில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டார்.

மோப்லி, வில்லியம்ஸுக்கு 10 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக Jacksonvilleஇன் JXT தொலைக்காட்சியிடம் கூறியிருக்கிறார்.

வில்லியம்ஸ் செய்த குற்றத்திற்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டலாம்.

2775 total views