பில் கட்டாததால், பிறந்த குழந்தையை 5 மாதமாக தராமல் வைத்திருந்த மருத்துவமனை!

Report
37Shares

மத்திய ஆரப்பிரிக்காவில் பிரசவம் பார்த்தற்கான பில்லை கட்டாததால், தாயிடம் இருந்து குழந்தையை 5 மாதமாக பிரித்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டைச் சேர்நதவர் சோனியா ஓகோம். இவர் கர்ப்பம் தரித்தையடுத்து, பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.ஏஞ்சல் என்று ஆசையாக பெயரிடப்பட்ட குழந்தை, 35 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்தனர். பின்னர், டெலிவரிக்குண்டான பில் இரண்டரை லட்சம் ரூபாயை கட்ட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

ஆனால், சோனியா ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால், மருத்துவமனை கேட்ட பணத்தை தர முடியாமல் போனது. இதையடுத்து, டெலிவரி பில்லை கட்ட வேண்டும் என்றும், அதைக் கட்டினால் தான் குழந்தையை தருவோம் என்ற மருத்துவமனை விடாப்பிடியாக இருந்தது.தொடர்ந்து சோனியா அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமன டீனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இந்த செய்தி வைராலாகி வர, நெட்டிசன்கள் தாமாக முன்வந்து மருத்துவமனைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து மீட்டனர்.

இந்த பணம் கொடுக்கு 5 மாதம் ஆகியுள்ளது. அதுவரையில், மருத்துவமனை நிர்வாகமோ குழந்தையை கொடுக்காமலே வைத்துள்ளனர்.

2064 total views