குடிபோதையில் ஒயின்ஷாப்பையே புரட்டிப் போட்ட டிரங்கன் மங்கி!!

Report
53Shares

பெங்களூர் பனஸ்வாடி அருகே உள்ள கம்மனஹல்லியில், குரங்கு ஒன்று குடித்துவிட்டு பாரில் கும்மாளம் போட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூர் பனஸ்வாடி அருகே உள்ளது கம்மனஹல்லி. இங்குள்ள பாரில் குரங்கு ஒன்று அடிக்கடி வந்து, மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதேபோல், மீதிவைக்கப்பட்ட மதுவையும் குடித்து வந்துள்ளது.இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அந்தக் குரங்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மதுவை குடித்துள்ளது. இதனால், பாரில் குடிபோதையில் ரகளை செய்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளனர். ஒரு சிலர் அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், போதை தெளிந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் சென்றுள்ளது. இதையடுத்து, குரங்கு அதுவாக அதிக மதுவை அருந்தியதா அல்லது யாரேனும் அதற்கு அதிகளவு மதுவை குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2635 total views