தான்சானியாவில் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி

Report
4Shares

தான்சானியா நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரில் உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகினர். மேலும் பலர் வீடுகளின் மேற்கூரையில் தங்கியுள்ளனர்.

நகரில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மே மாதம் வரை டார் ஏஸ் சலாம் பகுதியில் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்க

378 total views