சிங்கப்பூரில் ட்ரம்ப்- கிம் சந்திப்புக்காக குவிந்த 2,500 செய்தியாளர்கள்

Report
57Shares

சிங்கப்பூரில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் சந்திப்பை பதிவு செய்வதற்காக 2,500க்கும் அதிகமான செய்தியாளர்கள் குவிந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்தன.

சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கும் தமிழரான கே. சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி நேற்று பதிவிட்டிருந்தார்..

"வடகொரியா- அமெரிக்கா உச்சிமாநாட்டுக்கான ஊடக மையத்தை இன்று பார்வையிட்டேன். சுமார் 2,500க்கும் அதிகமான ஊடக பிரதிநிதிகள் இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்ய பதிவு செய்துள்ளனர்" என்று..

இன்று 2,500க்கும் அதிகமான செய்தியாளர்களும் எந்த வித சிரமும் இல்லாமல் செய்திகளை உடனுக்குடன் உலகம் முழுவதும் அனுப்புவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை சிங்கப்பூர் அரசு செய்திருந்தது. ஒரே இடத்தில் இத்தனை ஆயிரம் செய்தியாளர்களும் குவிந்திருந்தது மிகப் பெரிய மாநாடு போல் காட்சியளித்தது.

2842 total views