கிம்முக்காக கண்ணீர் சிந்திய அமெரிக்க கூடைப்பந்து வீரர்

Report
38Shares

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் டென்னிஸ் கெய்த் ரோட்மேன் (57). கூடைப்பந்தில் அதிக ஆர்வம் கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கெய்த் ரோட்மேனின் தீவிர ரசிகர் ஆவார். இதன் காரணமாக இருவரும் நண்பர்களாகினர். வடகொரியாவுக்கு பல முறை சென்றுள்ள கெய்த் ரோட்மேன் அதிபர் கிம்மை சந்தித்துப் பேசியுள்ளார்.

கிம்முடனான நட்பின் அடிப்படையில் கெய்த் ரோட்மேனும் நேற்று சிங்கப்பூரில் முகாமிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிம் சந்திப்பு குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவுக்கு சென்று கிம்மை சந்தித்தேன். அதன் பின் நாடு திரும்பியபோது பலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 30 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தேன். அதிபர் கிம் ஒரு பெரிய குழந்தை போன்றவர். அவரிடம் அதிபர் ட்ரம்ப் தனது மனிதாபிமானத்தை காட்ட வேண்டும். அமைதி திட்டத்தை இரு அதிபர்களும் முன்னெடுத்துச் செல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிருபர்களிடம் ரோட்மேன் பேட்டியளித்தபோது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினார்.

1420 total views