திருமண வரவேற்பில் தங்க காலணியுடன் வந்த தொழிலதிபர்

Report
241Shares

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை மற்றும் காலணியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சல்மான் சாஹித். இவர் திருமண வரவேற்பில் தங்க இழைகளால் ஆன ஆடை, தங்கப் படிகங்களால் ஆன Tie மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட காலணியுடன் கலந்து கொண்டார்.

இவரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இது குறித்து சல்மான் சாஹித் கூறுகையில்,

‘எனக்கு எப்போதும் தங்கக் காலணி அணிய வேண்டும் என்று விருப்பம். பொதுவாக தங்கத்தைக் கழுத்தில் ஆபரணமாக மக்கள் அணிகிறார்கள்.

செல்வம் உங்கள் கால் தூசிக்குச் சமமானது என்பதை கூறவே, நான் தங்கக் காலணியை அணிய விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். இவர் அணிந்திருந்த ஆடை மற்றும் காலணி ஆகியவற்றின் மொத்த மதிப்பு 25 லட்சம் என்று கூறப்படுகிறது.


11082 total views