ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தல்!

Report

நடைபெறவுள்ள ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேவிற்கு அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கோரியுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை நியுசிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நேரடி ஔிபரப்பை பேஸ்புக் நிறுவனத்தினால் தடைசெய்ய முடியாமல் போனமை குறித்தும் ஸ்கொட் மொரிசன் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, 50 பேர் கொல்லப்பட்ட நியுசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலின்போது, துப்பாக்கிதாரி சுமார் 17 நிமிடங்கள் நேரடி ஔிபரப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

568 total views