நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் 50 இடங்களில் தீ!

Report

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில், புதர்களில் பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் அங்கு நிலவும் வறண்ட வானிலை காரணமாக ஆங்காங்கு தீப்பற்றியது.

புதர் மண்டிய இடங்களில் பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில் இதுவரை சுமார் 20 வீடுகள் சோதமடைந்த நிலையில், மேலும் 50 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன் காற்றில் கரும்புகை கலந்து வருவதால், அங்குள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும், வீடுகள் அருகே தீ ஏற்படுகிறதா என்பதை கண்காணித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1952 total views