ஆஸ்திரேலியாவில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுவிற்கு நேர்ந்தகதி..!

Report
17Shares

ஆஸ்திரேலியாவில் பீர் மதுபானம் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானம் சாலையில் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் நேற்று பீர் டின்கள் அடங்கிய நூற்றுக்கு மேற்பட்ட அட்டைப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வடக்கு கடற்கரை வழியாக சென்றுள்ளது.

லாரி கிளெந்தோர்ன் என்ற இடம் அருகே நெடுஞ்சாலை வழியாக வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டு மண்மேடு மீது மோதி கவிழ்ந்ததில் பீர்பானங்கள் வீதியில் , கொட்டியுள்ளன.

இந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸார் , அப்பகுதி நெடுஞ்சாலையை மூடி சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பியதாக பீர் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா பிட்டர் பீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1195 total views