அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 30 வீடுகள் சேதம்!

Report

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிகபடுகின்றது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வறண்ட வானிலையுடனான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் அங்குள்ள புதர் மண்டிய இடங்களில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகின்றது.

அத்துடன் காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலுள்ள புதர் பகுதிகளுக்கும் பரவி இதுவரை 40 இற்கும் மேற்பட்ட புதர்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றது.

இந் நிலையில், அதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு , தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

722 total views