பொதிகளை கையாள்பவர்களுக்கும் பரவும் கொரோனா... நெருக்கடி நிலையில் அடிலெய்ட் விமானநிலையம்!

Report

அடிலெய்ட் விமானநிலையத்தில் பயணிகளின் பொதிகளை கையாளும் பணியாளர்கள் 13 பேரும் அவர்களது குடும்பத்தவர்கள் இருவரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தென் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடிலெய்ட் விமானநிலையத்தின் ஊடாக பயணித்தவர்கள் அல்லது விமானநிலையத்தின் வாகனத்தரிப்பிடத்தை பயன்படுத்தியவர்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் தென்அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் விமானநிலையத்தை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களை தனிமைப்படுத்துவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையத்தை மூடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

4175 total views