மெல்பேர்னில் மசாஜ் நிலையமொன்றிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை

Report

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் மசாஜ் நிலையமொன்றிற்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தியாவசியமற்ற சேவைகளை வழங்கிக்கொண்டிருந்த குறித்த மசாஜ் நிலையத்தினை அவுஸ்திரேலியாவின் பாலியல் தொழில் ஒருங்கிணைப்பிற்கான விசேட காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் விதிமுறைகளை மீறி அத்தியாவசியமற்ற சேவைகளை வழங்கியமைக்காக மசாஜ் நிலையங்களிற்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட மசாஜ் நிலையத்திற்கு பொலிஸார் சென்றவேளை அத்தியாவசியமற்ற சேவைகளை வழங்குவதை பார்த்ததாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மசாஜ் நிலைய உரிமையாளர், அங்கிருந்த பெண் மற்றும் வாடிக்கையாளர்களிற்கு எதிராக தாம் அபராதத்தை விதித்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

3431 total views