ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் முழு ஊரடங்கு: கொரோனா பாதிப்பு பேரிடராக அறிவிப்பு!

Report

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான விக்டோரியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதுடன் , அது பேரிடர் அவசர நிலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல நகரங்களில் ஊரடங்கு அமலான நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலிய அரசு கடுமையாகப் போராடிவருகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று, விக்டோரியா நகரில் 671 பேர் தொற்றுள்ளவர்களாக புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து விக்டோரியா நகரில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கும் என்ற அச்சத்தில் ஆறு வார காலத்திற்கு ஊரடங்கு அமலாகிறது.

மேலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில், அங்கு வசிக்கும் 50 லட்சம் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

2090 total views